மாவட்ட செய்திகள்

திருத்தணி அருகே பெண்ணிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு + "||" + 8 poun gold chain flush with woman near Thiruthani

திருத்தணி அருகே பெண்ணிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

திருத்தணி அருகே பெண்ணிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
திருத்தணி அருகே கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் 8½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
மளிகை கடை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரக்கோணம் சாலையில் அமைந்துள்ள பெருமாள்தாங்கள் புதூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 64) இவரது கணவர் வெற்றிபாண்டியன் (70). இவர் அந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வந்தார். இந்த கடைக்கு உதவியாக அவரது மனைவியும் இருந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதியன்று உணவு சாப்பிடுவதற்காக மனைவி மகேஸ்வரியை கடையில் இருக்க சொல்லிவிட்டு வெற்றிபாண்டியன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

சங்கிலி பறிப்பு

அப்போது கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து மகேஸ்வரி அணிந்து இருந்த 8½ பவுன் தங்க சங்கலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இது குறித்து மகேஸ்வரி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருத்தணி அருகே எரிந்த நிலையில் ஆண் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை
திருத்தணி அருகே எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
2. திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. திருத்தணி அருகே ஏரி உடைப்பை சரிசெய்த பொதுப்பணித்துறையினர்
திருத்தணி அருகே ஏரி உடைப்பை மணல் மூட்டைகளை அடுக்கி பொதுப்பணித்துறையினர் சரி செய்தனர்.
4. திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதல்
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதி சுகாதார மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
5. திருத்தணி அருகே 2 ஏரிகளில் தண்ணீர் கசிவா?
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருத்தணி அருகே சூரிய நகரம் மற்றும் செருக்கனூர் ஆகிய ஏரிகள் நிரம்பி உள்ளன.