மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்: ரஷிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 18 ஆண்டு ஜெயில் + "||" + Drug trafficking: Russian jailed for 18 years

போதைப்பொருள் கடத்தல்: ரஷிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 18 ஆண்டு ஜெயில்

போதைப்பொருள் கடத்தல்: ரஷிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 18 ஆண்டு ஜெயில்
போதைப்பொருள் கடத்தல்: ரஷிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 18 ஆண்டு ஜெயில் சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு.
சென்னை,

ரஷிய நாட்டைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 48). இவர், புதுச்சேரியில் வசித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு இவர், மூலிகை மருந்து என போதைப்பொருட்களை அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளுக்கு விரைவுத்தபால் மூலம் அனுப்பி வந்தார். இதை அறிந்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, அலெக்சாண்டர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் மீது பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் 5 சட்டப்பிரிவுகளில் தனித்தனியாக 18 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் தொடர்ந்த வழக்கு... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
2. அ.தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அனைத்து கிரிமினல் அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
3. வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: கைதான தாசில்தாருக்கு நிபந்தனை ஜாமீன்
வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: கைதான தாசில்தாருக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை கோர்ட்டு உத்தரவு.
4. அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுன் ஆஜராக வேண்டும் சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு
அடுத்த மாதம் 11-ந் தேதி அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுன் ஆஜராக வேண்டும் சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு.
5. தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.