மாவட்ட செய்திகள்

சென்னை மின்சார ரெயில்களில்: 2 தவணை தடுப்பூசி போடாத 7,762 பேரின் பயணம் ரத்து + "||" + Chennai electric trains: 7,762 non-vaccinated passengers canceled in 2 installments

சென்னை மின்சார ரெயில்களில்: 2 தவணை தடுப்பூசி போடாத 7,762 பேரின் பயணம் ரத்து

சென்னை மின்சார ரெயில்களில்: 2 தவணை தடுப்பூசி போடாத 7,762 பேரின் பயணம் ரத்து
சென்னை மின்சார ரெயில்களில்: 2 தவணை தடுப்பூசி போடாத 7,762 பேரின் பயணம் ரத்து அதிகாரிகள் நடவடிக்கை.
சென்னை,

சென்னையில் உள்ள மின்சார ரெயில்களில் கடந்த 10-ந் தேதி முதல் 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பயணிக்க அனுமதி என தெற்கு ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2 தவணை தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே மின்சார ரெயில்களுக்கு கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. மேலும் சீசன் டிக்கெட்களில் சான்றிதழ்களின் எண்களும் அச்சிடப்பட்டன. இந்த நிலையில் 2 தவணை தடுப்பூசி போடாமல் பயணம் மேற்கொள்கிறவர்களை கண்டறிய அனைத்து புறநகர் ரெயில் நிலையங்களிலும் தனிப்படை அமைத்து ரெயில்வே அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் 2 தவணை தடுப்பூசி போடாத 7 ஆயிரத்து 762 பேரை மின்சார ரெயிலில் பயணம் மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் மட்டும் முக கவசம் அணியாதவர்கள் மீது 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.52 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் திருநாளை முன்னிட்டு பணியாளர்களுக்கு ரூ.7 கோடி சாதனை ஊக்கத்தொகை போக்குவரத்து துறை நடவடிக்கை
பொங்கல் திருநாளை முன்னிட்டு 1 லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ரூ.7 கோடியே 1 லட்சம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
2. மின்சார ரெயில்களில் பயணிகள் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனரா? ரெயில்வே அதிகாரிகள் சோதனை
சென்னையில் மின்சார ரெயில் பயணிகள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா? என ரெயில்வே அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
3. அண்ணா மீது ஆணை: “தி.மு.க.வை சேர்ந்தவர்களே தவறு செய்தாலும் நடவடிக்கை” - மு.க.ஸ்டாலின் உறுதி
தி.மு.க.வை சேர்ந்தவர்கள் யார் தவறு செய்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. விடுமுறையில், வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை: மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை
கல்வித்துறை அறிவிப்பை மீறி விடுமுறையில், வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலம் சீரமைப்பு - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலம் சீரமைப்பு - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை.