மாவட்ட செய்திகள்

முககவசம் அணியாத 694 பேருக்கு அபராதம் + "||" + 694 fined for not wearing face mask

முககவசம் அணியாத 694 பேருக்கு அபராதம்

முககவசம் அணியாத 694 பேருக்கு அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 694 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி பொதுஇடங்களில் முககவசம் அணியாத 694 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா பரவல்
தற்போது ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்து நடைமுறை படுத்தி வருகிறது. இதனால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடைவிதித்து உள்ளது. அதுபோல் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
694 பேர் மீது நடவடிக்கை
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களுக்கு முககவசம் அணியாமல் வருபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 287 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 71 பேர் மீதும், திருச்செந்தூர், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் தலா 50 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 42 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 52 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 109 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 33 பேர் மீதும், என மொத்தம் 694 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
ரூ.1.39 லட்சம் வசூல்
மேலும் கோவில்பட்டி உட்கோட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டது.