சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 112 பேர் கைது


சட்டவிரோத செயல்களில்  ஈடுபட்ட 112 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jan 2022 12:03 PM GMT (Updated: 15 Jan 2022 12:03 PM GMT)

பொங்கல் பண்டிகையின் போது மதுபோதையில் தகராறு, கஞ்சா, மது விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 112 பேரை போலீசார் கைதுசெய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது மதுபோதையில் தகராறு, கஞ்சா, மது விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 112 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
போலீஸ் ரோந்து
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
112 பேர் கைது
 நேற்று முன்தினம் ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 12 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 10 வழக்குகளும், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உட்கோட்டங்களில் தலா 15 வழக்குகளும், மணியாச்சி உட்கோட்டத்தில் 14 வழக்குகளும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 16 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 10 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 5 வழக்குகளும் என 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 பேர் கைது செய்யப்பட்டனர். 
கஞ்சா, மதுபாட்டில்கள் பறிமுதல்
மேலும் அவர்களிடமிருந்து ஆயிரத்து 250 மதுபாட்டில்கள், கஞ்சா, புகையிலைப் பொருட்கள், இரு சக்கர வாகனம் மற்றும் பணம் ரூ.5 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story