ஆட்டோ டிரைவரை கொலை செய்த நண்பர்கள் 3 பேர் கைது


ஆட்டோ டிரைவரை கொலை செய்த நண்பர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jan 2022 1:16 PM GMT (Updated: 15 Jan 2022 1:16 PM GMT)

ஆட்டோ டிரைவரை கொலை செய்த நண்பர்கள் 3 பேர் கைது

திருப்பூரில் திருடிய பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவதுடிரைவர் கொலை
மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் சரவணக்குமார்வயது 27. இவர் திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஆட்டோ டிரைவராக வேலைசெய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13ந் தேதி மாலை மேட்டுப்பாளையம் தோப்புத்தோட்டத்தில் அரசமரம் அருகே கழுத்து அறுக்கப்பட்டு தலையில் கல்லால் தாக்கப்பட்டு சரவணக்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில் சரவணக்குமாருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அரவிந்த் ஆலோசனையின் பேரில், உதவி கமிஷனர் அனில்குமார் மேற்பார்வையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு
இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று 3 பேரை பிடித்தனர். விசாரணையில், அவர்கள் திருப்பூர் மேட்டுப்பாளையம் ராமையா காலனியை சேர்ந்த சித்திக் 29, மனோஜ் , நன்னு பிரசாத்  என்பது தெரியவந்தது. சித்திக்கின் சொந்த ஊர் திண்டுக்கல். நன்னு பிரசாத்தின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் ஆகும்.
சரவணக்குமார் மற்றும் சித்திக் உள்ளிட்ட நண்பர்கள் கடந்த 13ந் தேதி மில்லர் பஸ் நிறுத்தம் அருகே குடிபோதையில் ரோட்டோரம் கிடந்த நபரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை திருடியுள்ளனர். அந்த பணத்தை பங்கு பிரிப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சித்திக், மனோஜ், நன்னு பிரசாத் ஆகியோர் சேர்ந்து சரவணக்குமாரை உடைந்த பாட்டிலால் கழுத்தை அறுத்தும், கல்லால் தலையில் தாக்கியும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
3 பேர் கைது
இதைத்தொடர்ந்து சித்திக், மனோஜ், நன்னு பிரசாத் ஆகிய 3 பேரையும் வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story