மாவட்ட செய்திகள்

மது விற்ற 7 பேர் சிக்கினர்; 84 மதுபாட்டில்கள் பறிமுதல் + "||" + 7 people were caught selling alcohol

மது விற்ற 7 பேர் சிக்கினர்; 84 மதுபாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற 7 பேர் சிக்கினர்; 84 மதுபாட்டில்கள் பறிமுதல்
முக்காணி பகுதியில் மதுவிற்ற 7 பேரை போலீசார் கைது செய்து, 84 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முக்காணி ரேஷன் கடை அருகே மது விற்று கொண்டிருந்த கொட்டாரக்குறிச்சியை சேர்ந்த சின்ன ராஜா (வயது 22), பழையகாயல் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த செல்வம் (20), முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே மது விற்ற முக்காணி புதுமனையை சேர்ந்த சரவணகுமார் (33), தலைவன்வடலி வடக்கு தெருவில் மது விற்ற, அதே பகுதியை சேர்ந்த பழனி முருகன் (46), சந்தன மகராஜன் (45), கீரனூர் பஸ் நிறுத்தம் அருகே மது விற்ற காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த திருமுருகன் (43), வடக்கு ஆத்தூர் பாலம் பகுதியில் மது விற்றதாக ஆறுமுகநேரி இலங்கத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பச்சை வேல் (49) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 84 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.