மாவட்ட செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + women suicide

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பொங்கலூர் அருகே திருமணமான ஒரு வருடத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குடும்பத்தகராறு
பொங்கலூர் அம்மன் நகர் வேலுசாமி காம்பவுண்டடை சேர்ந்தவர் பாண்டியன் இவரது மனைவி ரஞ்சிதா  பாண்டியன் பொங்கலூர் அருகே கள்ளிமேட்டில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். ரஞ்சிதா வீட்டில் இருந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. 
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாண்டியன் ரஞ்சிதாவை அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பொங்கலூர் கடை வீதிக்கு பாண்டியன் வந்துவிட்டார். 
தூக்குப்போட்டு தற்கொலை
திரும்ப வீட்டிற்கு சென்று பார்த்தபோது ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஞ்சிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார்.
3. பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தூசி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. வலிப்பு நோயால் அவதி: பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே வலிப்பு நோயால் அவதிப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.