மாவட்ட செய்திகள்

ஊட்டியில் உறைபனி தாக்கம் மீண்டும் அதிகரிப்பு + "||" + Re increase the impact of frost on the feed

ஊட்டியில் உறைபனி தாக்கம் மீண்டும் அதிகரிப்பு

ஊட்டியில் உறைபனி தாக்கம் மீண்டும் அதிகரிப்பு
ஊட்டியில் உறைபனி தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரியாக பதிவானது.
ஊட்டி

ஊட்டியில் உறைபனி தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரியாக  பதிவானது.

உறைபனி தாக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி குளிர்பிரதேசமாகவும், புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். கடந்த மாதம் முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உறைபனி தாக்கம் நிலவியது. 

பின்னர் கால நிலை மாற்றம் காரணமாக உறைபனி தாக்கம் குறைந்து, நீர்பனி தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் காலை முதல்  மதியம் வரை வெயிலும், அதன் பின்னர் மேகமூட்டமான காலநிலையும் நிலவி வந்தது.
ஊட்டியில் தற்போது உறைபனி தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. 

 ஊட்டி தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதான புல்வெளிகளில் உறைபனி படர்ந்து இருந்தது. குதிரை பந்தய மைதானத்தில் பசுமையான புல்வெளிகளே தெரியாத அளவுக்கு உறைபனி காணப்பட்டது. சதுப்பு நிலம் மற்றும் தாழ்வான பகுதி என்பதால் அங்கு உறைபனி அதிகமாக இருந்தது. இதனால் காஷ்மீரில் நிலவும் காலநிலை போன்று காட்சி அளித்தது.

புல்வெளியில் உறைபனி

ஊட்டி ரெயில் நிலைய வளாகத்தில் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் உள்ள புல்வெளிகள் மீது உறைபனி படர்ந்து இருந்தது. ஊட்டி ஏரி உள் ளிட்ட நீர்நிலைகளில் உறைபனி தாக்கத்தால் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக வெயில் வந்த பின்னர் தண்ணீர் ஆவியானது. 

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் குறைந்தபட்ச வெப்ப நிலை 6.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 21.2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 3.9 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியது.

அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரி

ஊட்டி அருகே அவலாஞ்சி வனப்பகுதியில் அதிகாலையில் புல்வெளி களில் உறைபனி கொட்டிக் கிடக்கிறது. 2 நாட்களாக குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி பதிவாகி வருகிறது. உறைபனி தாக்கம் அதிகரிப்பால் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் எளிதில் இயக்க முடிவதில்லை. 
என்ஜின் மீது சூடான தண்ணீரை ஊற்றிய பின்னர் இயக்க முடிகிறது.

 வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சூடாக நீண்ட நேரம் ஆகிறது. இரவு, அதிகாலையில் கடும் குளிர் நிலவுவதால் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் ஊட்டி மணிக்கூண்டு, ஏ.டி.சி. உள்ளிட்ட பகுதிகளில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.