மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் முழுவதும் பொங்கல், மாட்டுப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த மக்கள் விளையாட்டு போட்டிகளுக்கு வேட்டு வைத்த கொரோனா + "||" + Across Theni district People who enjoyed Pongal and Matupongal Corona hunting for sports

தேனி மாவட்டம் முழுவதும் பொங்கல், மாட்டுப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த மக்கள் விளையாட்டு போட்டிகளுக்கு வேட்டு வைத்த கொரோனா

தேனி மாவட்டம் முழுவதும் பொங்கல், மாட்டுப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த மக்கள் விளையாட்டு போட்டிகளுக்கு வேட்டு வைத்த கொரோனா
தேனி மாவட்டம் முழுவதும் பொங்கல், மாட்டுப் பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

தேனி:
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம் முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மக்கள் தங்களின் வீடுகளின் முன்பு புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடத்தினர். விவசாயிகள் பலர் தங்களின் விவசாய தோட்டத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. போலீஸ் நிலையங்கள் முன்பு பொங்கல் வைத்து போலீசார் கொண்டாடினர். தேனி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அனைத்து மகளிர் போலீஸ்நிலையம்
உத்தமபாளையம் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர், ராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 
உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமை தாங்கினார். இதில் இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம், மற்றும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து ெகாண்டனர். 
கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியில் கல்வி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி இல்லம் தேடி கல்வி மையத்தின் தன்னார்வலர்கள் வண்ண கோலமிட்டு, பொங்கல் வைத்தனர். இதில் அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் சுந்தர், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாநில கருத்தாளர் முத்துக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டிகளுக்கு வேட்டு
பொங்கல் பண்டிகை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைவருக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். கிராமிய மண்மணம் மாறாத சிறுசிறு விளையாட்டு போட்டிகளால் மக்களிடம் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். 
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. இவ்வாறு விளையாட்டு போட்டிக்கு வேட்டு வைத்ததால் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளில் வழக்கமான கோலாகலத்தை பார்க்க முடியவில்லை.
மாட்டுப்பொங்கல்
அதுபோல், பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான நேற்று மாட்டுப்பொங்கல் பண்டிகையை கால்நடை வளர்ப்பவர்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அதன்படி நேற்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கால்நடை வளர்ப்பவர்கள் மாட்டுப் பொங்கலை கொண்டாடினர். மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசியும், வண்ணக் கயிறுகளை கழுத்தில் கட்டியும் அலங்கரித்தனர். மாட்டுக் கொட்டகை பகுதியில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் மாடுகளுக்கு சர்க்கரை பொங்கல் ஊட்டி விட்டனர்.
மாலையில் அலங்கரிக்கப்பட்ட மாடுகளை ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பொதுமக்கள் பலரும் மாடுகளை வேடிக்கை பார்த்தனர். சில ஊர்களில் ஊர்வலம் முடிந்தபின்னர் மாடுகளை கட்டி அழைத்துச் சென்ற கயிற்றை அவிழ்த்து விட்டு மாடுகளை ஓடவிட்டனர். அந்த மாடுகளை இளைஞர்கள் சிலர் துரத்திப் பிடிக்க முயன்றனர். சிறிது நேரத்துக்கு பிறகு மாட்டின் உரிமையாளர்கள் அந்த மாடுகளை கயிற்றால் கட்டி அழைத்து சென்றனர்.