மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு + "||" + gold chain snaching

பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
திருப்பூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த கிருபாகரனின் மனைவி கவுரி வயது 35. இவர் கடந்த 13ந் தேதி ஸ்கூட்டரில் வெங்கமேட்டில் இருந்து சாமந்தக்கோட்டைக்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கவுரி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்கள். இதுகுறித்து கவுரி அளித்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.