மாவட்ட செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு + "||" + From Mullaiperiyaru Dam Extra water opening

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து  கூடுதல் தண்ணீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 2-ம் போக நெல் சாகுபடி பணிகளுக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 
கடந்த சில மாதங்களாக கேரள மாநிலம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை எட்டியது. இந்நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்துவருகிறது. கடந்த 13-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.45அடியாகவும், தண்ணீர் திறப்பு வினாடிக்கு 65 கனஅடியாகவும் இருந்தது. இந்நிலையில், 2-ம் போக நெல் சாகுபடி பணிகளுக்காக நேற்று முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 343 கன அடியாக உள்ளது.