மாவட்ட செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய 2 பேர் கைது + "||" + 2 arrested for assaulting RSS administrator

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய 2 பேர் கைது

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய 2 பேர் கைது
கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பம்:
கம்பம் தாத்தப்பன்குளம் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 45). ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி. கடந்த 6-தேதி காலை ரவிக்குமார் வீட்டில் இருந்து கடைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அவரை முககவசம் அணிந்து வந்த சிலர் வழிமறித்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் பதிவான செல்போன் சிக்னல், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 
இதைத்தொடர்ந்து ரவிக்குமாரை தாக்கியதாக கம்பம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த வாஜித் (36), கம்பம் மெட்டுகாலனியை சேர்ந்த சதாம்உசேன் (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.