மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாடிய 102 வயது மூதாட்டி + "||" + 102 year old grandmother celebrating birthday

பிறந்தநாள் கொண்டாடிய 102 வயது மூதாட்டி

பிறந்தநாள் கொண்டாடிய 102 வயது மூதாட்டி
பிறந்தநாள் கொண்டாடிய 102 வயது மூதாட்டி
கோவை

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தவசி ஆர்.அலமேலு அம்மாள். இவர் தனது 102-வது பிறந்தநாளை தனது வீட்டில் சொந்த,பந்தங்கள் புடைசூழ கொண்டாடினார். அப்போது கேக் வெட்டப்பட்டு ஒரு கிராமத்தின் திருவிழா போலவே பிறந்த நாள் விழா நடந்தது. அலமேலு அம்மாவுடன் மகன், மகள், பேத்தி, பேரன், கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தலைமுறையினருக்கு கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இவர் வாழ்வதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நடன போட்டி, உறியடித்தல், கண்ணாமூச்சி போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கபட்டது. மேலும் குடும்பத்தினர் அனைவரும் பிறந்தநாள் கொண்டாடும் அலமேலு அம்மாளிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.