மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் டாக்டர்கள் உள்பட 162 பேருக்கு கொரோனா + "||" + In Theni district Corona for 162 people including doctors

தேனி மாவட்டத்தில் டாக்டர்கள் உள்பட 162 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் டாக்டர்கள் உள்பட 162 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் டாக்டர்கள் உள்பட 162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவல் வேகம் எடுத்துள்ளது. தினமும் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 3 பயிற்சி டாக்டர்கள், 4 மாணவ-மாணவிகள் ஆகியோர் உள்பட தேனி மாவட்டத்தில் நேற்று 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 712 ஆக அதிகரித்து உள்ளது.