தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Jan 2022 4:06 PM GMT (Updated: 15 Jan 2022 4:06 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:
குவிந்து கிடக்கும் குப்பை 
தேனியை அடுத்த சருத்துப்பட்டி இந்திரா காலனியில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், சருத்துப்பட்டி.
பாதயாத்திரை பக்தர்கள் அவதி
திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பழனியில் நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு சொந்த ஊருக்கு பஸ்சில் திரும்புகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அவர்களின் ஊர்களுக்கு செல்ல இரவு நேரத்தில் பஸ்கள் கிடைப்பதில்லை. இதனால் ஆட்டோக்கள் மூலம் செல்கின்றனர். ஆனால் இரவு நேர ஊரடங்கை காரணம் காட்டி போலீசார் பக்தர்களை ஆட்டோக்களில் செல்ல விடாமல் தடுக்கின்றனர். இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், திண்டுக்கல்.
தண்ணீர் தொட்டி சேதம்
பழனி சத்யாநகரில் ஆழ்துளை கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக அப்பகுதிகளில் உள்ள தெருக்களில் தண்ணீர் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பராமரிப்பு இல்லாததால் இந்த தொட்டிகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜன், பழனி.
குண்டும், குழியுமான சாலை
குஜிலியம்பாறையை அடுத்த ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி கொண்டமநாயக்கனூரில் இருந்து செங்குளுத்துப்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெரால்டு, கொண்டமநாயக்கனூர்.


Next Story