மாவட்ட செய்திகள்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் + "||" + tourist people in sea shore

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் விடுமுறையையொட்டி தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பொறையாறு;
பொங்கல் விடுமுறையையொட்டி தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.  
தரங்கம்பாடி கடற்கரை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடற்கரைக்கு மிக அருகில் வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை உள்ளது. இந்த டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரை அழகை ரசிக்க வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தரங்கம்பாடிக்கு வந்து செல்கிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்தது. ஆண்டு தோறும் காணும் பொங்கல் தினத்தன்று தரங்கம்பாடி கடற்கரையில் இளம்பெண்கள், இளைஞர்கள் கூட்டம் அலைமோதும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணும் பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. 
போலீஸ் பாதுகாப்பு
எனவே நேற்று மாட்டு பொங் கல் தினத்தில் தரங்கம்பாடி கடற்கரை மற்றும் டேனிஷ் கோட்டை ஆகிய பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து குவிந்தனர். கடற்கரையில் குவிந்த மக்கள் கடல்அழகை ரசித்து மகிழ்ந்தனர். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு சென்ற மக்கள் அதன் சிறப்புகளை கண்டுகளித்தனர்.  மேலும் கடற்கரையில் உள்ள திண்பண்ட கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தரங்கம்பாடி கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடலோர காவல் குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.