மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடியே 90 லட்சம் மதுவிற்பனை + "||" + 6 crore 90 lakh liquor sales in one day in Thiruvarur district

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடியே 90 லட்சம் மதுவிற்பனை

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடியே 90 லட்சம் மதுவிற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடியே 90 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றது. இது கடந்த ஆண்டை விட ரூ.75 லட்சம் அதிகமாகும்.
திருவாரூர்:
பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடியே 90 லட்சத்துக்கு  மது விற்பனை நடைபெற்றது. இது கடந்த ஆண்டை விட  ரூ.75 லட்சம் அதிகமாகும். 
மதுப்பிரியர்கள் உற்சாகம் 
திருவாரூர் மாவட்டத்தில் 108 டாஸ்மாக் கடைகள் உள்ளன. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம்.  பொங்கல், மாட்டு பொங்கல் ஆகிய விழாக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். 
திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் பொங்கல் பண்டிகையன்று மது பாட்டில்களை வாங்கி குவித்தனர். 
ரூ.6 கோடியே 90 லட்சம் மதுவிற்பனை
இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்தது. இதனால் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ரூ.6 கோடியே 90 லட்சம் மதிப்பிலான பீர் மற்றும் மதுவகைகள் விற்பனையானது.
சராசரியாக நடைபெறும் மது விற்பனையை விட 2 மடங்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.75 லட்சம் அதிகமாகும்.