கார் மோதி வாலிபர் சாவு


கார் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 15 Jan 2022 5:22 PM GMT (Updated: 2022-01-15T22:52:15+05:30)

கார் மோதி வாலிபர் சாவு

ராமநாதபுரம், 
கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் தெற்கு கொட்டகை பகுதியை சேர்ந்தவர் சங்கு மகன் துரைமுருகன் (வயது 30). இவர் தனது அண்ணன் ஜோதிமுருகனுடன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் பண்டிகைக்கு விடுமுறையில் ஊருக்கு வந்த துரைமுருகன் ராமநாதபுரத்தில் உள்ள தனது நண்பர்களை பார்க்க மோட்டார்சைக்கிளில் சென்றார். ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி அருகில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி துரைமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான மதுரை மேலனப்பாளையம் பகுதியை சேர்ந்த சத்யாராஜ் (34) என்பவரை தேடிவருகின்றனர்.


Next Story