தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 15 Jan 2022 6:51 PM GMT (Updated: 2022-01-16T00:21:49+05:30)

வடக்கன்குளம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வடக்கன்குளம்:
கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சுஜின் (வயது 28). கட்டிட தொழிலாளி. தற்போது தனது மனைவியுடன் நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள யாக்கோபுரத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சுஜின் தனது மனைவியிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்க பணம் கேட்டாராம். ஆனால் அவருடைய மனைவி பணம் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்து காணப்பட்ட சுஜின் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுஜின் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story