பீடி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருட்டு


பீடி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 15 Jan 2022 8:01 PM GMT (Updated: 2022-01-16T01:31:38+05:30)

சிவகாசியில் பீடி நிறுவனத்தில் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

சிவகாசி, 
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் செந்தில்முருகன் என்பவர் பீடி நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் கிளை அலுவலகம் சிவகாசி ராமசாமி நகரில் செயல்பட்டு வருகிறது. இதை கண்ணன் (வயது 39) என்பவர் நிர்வாகித்து வருகிறார். ஆலங்குளத்தில் இருந்து வரும் பீடி மூடைகள் இங்கு தான் இறக்கி வைக்கப்படும். பின்னர் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பீடிகள் அனுப்பி வைக்கப்படும். பீடி விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை கண்ணன் இந்த அலுவலகத்தில் வைத்து விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பீடி நிறுவன அலுவலகத்தில் பூட்டு உடைக்கப்பட்டு அலுவலகத்தில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்தை  மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story