வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 Jan 2022 8:02 PM GMT (Updated: 2022-01-16T01:32:04+05:30)

திருமங்கலம் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

லாரி கிளீனர் பலி

திருமங்கலம் அருகே உள்ள சித்தாலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 27). இவர் கப்பலூர் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் சித்தாலையில் இருந்து மேலஉரப்பனூர் சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். வரும் வழியில் உரப்பனூர் அருகே நின்றிருந்த மினி லாரியில் எதிர்பாராதவிதமாக மோதி பலத்த காயமடைந்தார்.உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெண் சாவு

கள்ளிக்குடி அருகே உள்ள சோளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருடைய மனைவி வீரலட்சுமி (28). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் சென்றுவிட்டு மீண்டும் கள்ளிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். சிவரக்கோட்டை அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் சேலை சிக்கி நிலைதடுமாறி வீரலட்சுமி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கள்ளிக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story