ஈரோட்டில் ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் வீட்டில் திருடிய 4 பேர் கைது; 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு


ஈரோட்டில் ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் வீட்டில் திருடிய 4 பேர் கைது; 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
x
தினத்தந்தி 15 Jan 2022 10:27 PM GMT (Updated: 15 Jan 2022 10:27 PM GMT)

ஈரோட்டில் ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் வீட்டில் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

ஈரோடு
ஈரோட்டில் ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் வீட்டில் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
திருட்டு
ஈரோடு மூலப்பாளையம் என்.ஜி.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 70). ஓய்வு பெற்ற சப்-கலெக்டர். சம்பவத்தன்று வெள்ளிங்கிரி தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். மறுநாள் அதிகாலையில் வீட்டின் ஜன்னல் கதவை மர்மநபர்கள் திறந்து குச்சியை பயன்படுத்தி ரூ.7 ஆயிரத்தை திருடி சென்றனர்.
இதுகுறித்து வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் திருடர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதில் 4 பேர் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து ஜன்னலை திறந்து குச்சிமூலம்  பணத்தை திருடியது தெரிய வந்தது.
4 வாலிபர்கள் கைது
இந்தநிலையில் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (23), ஈரோடு மாவட்டம் முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்த பிரபு (23), 19 வயதுடைய 2 பேர் என்பதும், அவர்கள் 4 பேரும் சேர்ந்து ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் வெள்ளியங்கிரி வீட்டில் ரூ.7 ஆயிரத்தை திருடியதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களும் திருடப்பட்டது என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டனர்.

Related Tags :
Next Story