வியாபாரிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்: திருவள்ளூர் நகராட்சி ஆணையர்


வியாபாரிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்: திருவள்ளூர் நகராட்சி ஆணையர்
x
தினத்தந்தி 16 Jan 2022 3:50 PM GMT (Updated: 2022-01-16T21:20:29+05:30)

வியாபாரிகள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

அபராதம்

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையான சி.வி. நாயுடு சாலை, ஜெ.என்.சாலை, பஸ் நிலையம், தேரடி, பஜார் வீதி, பெரியகுப்பம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் தடுப்பூசி செலுத்தாமலும், முக கவசம் அணியாமல் இருந்த 9 கடைகளுக்கு ரூ.13 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.

ஆலோசனை கூட்டம்

இதனை தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுடன் கொரோனா பரவல் குறித்த ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில்:-

நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றை தவிா்க்க, வாடிக்கையாளா்கள் முக கவசம் அணிந்து வருவதை வியாபாரிகள் கண்காணிக்க வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடை ஊழியா்கள் மற்றும் வியாபாரிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும். தடுப்பூசி செலுத்தாமல் கடைகளில் பணியாற்றினால் கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என எச்சரித்து பேசினார்.

கூட்டத்தில், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், துப்புரவு ஆய்வாளர் சுதர்சன், சுதாகர் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனா்.


Next Story