மதுரையில் புதிதாக 569 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 569 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Jan 2022 5:56 PM GMT (Updated: 16 Jan 2022 5:56 PM GMT)

569 பேருக்கு கொரோனா

மதுரை, 
மதுரையில் புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கொரோனா பாதிப்பு 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று புதிதாக 23 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று, புதிதாக 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவின் முதல், 2-ம், 3-ம் அலையில் மதுரை மாவட்டத்தில் 80 ஆயிரத்து 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்து 467 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 93 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு வேறு சில நோய்கள் இருந்ததால் அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் மூலம்
1,193 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது, மதுரை மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து 3,696 ஆக உள்ளது.
சிகிச்சை
அவர்களில் 2,298 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் கொரோனா கண்காணிப்பு மையங்கள், தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். வெளி மாவட்டத்தை சேர்ந்த 71 பேரும் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், "மதுரையில் கொரோனா அதிக அளவில் பரவி வந்தாலும், இன்னும் பலர் முக கவசம் அணியாமல் சுற்றி வருகின்றனர். இதனால் தான் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அப்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்" என்றனர்.
========== 

Next Story