ஆட்டோ டிரைவர் வீட்டில் பொருட்கள் திருட்டு; 2 பேர் கைது


ஆட்டோ டிரைவர் வீட்டில் பொருட்கள் திருட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2022 6:14 PM GMT (Updated: 2022-01-16T23:44:55+05:30)

நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேட்டை:
நெல்லை அருேக சுத்தமல்லியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொருட்கள் திருட்டு
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி முப்பிடாதி அம்மன் கோவில் இந்திரா காலனியை சோ்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மகாராஜன் (வயது 34). ஆட்டோ டிரைவரான இவர் சுத்தமல்லியில் ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவருடைய மனைவி அய்யம்மாள் (30). இவர் நேற்று முன்தினம் மதியம் அருகில் உள்ள வாய்க்காலுக்கு சென்று குளித்துவிட்டு வீடு திரும்பினார்.
வீட்டை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் மூட்டைகளில் கட்டி வைத்து இருந்த 2 மிக்ஸி, இண்டக்சன் அடுப்பு மற்றும் எவா்சில்வா் பாத்திரங்கள் திருடு போயிருப்பதை கண்டு அய்யம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மகாராஜன் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டா் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

2 பேர் கைது
விசாரணையில் சுத்தமல்லி முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சோ்ந்த முருகன் (55) மற்றும் கசமாடன் மகன் கணேசன் (35) ஆகிய இருவரும் சேர்ந்து மகாராஜன் வீட்டில் பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story