விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு


விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 16 Jan 2022 11:07 PM GMT (Updated: 2022-01-17T04:37:28+05:30)

விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு.

சென்னை,

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள வடக்குபனவடலி திருமால்புரத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜ் (வயது 22). லாரி டிரைவர். கடந்த 2017-ம் ஆண்டு இவர், தாம்பரம்-மதுரவாயல் பை-பாஸ் சாலையில் லாரி ஓட்டி சென்றார். திருநீர்மலை அருகே சென்றபோது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது சவுந்தரராஜ் ஓட்டிச்சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி சவுந்தரராஜின் தாயார் சீலக்காரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.வேல்ராஜ், பார்க்கிங் அல்லாத பகுதியில் எந்தவித எச்சரிக்கை சிக்னலும் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியால்தான் விபத்து நடந்துள்ளது எனக்கூறி மனுதாரருக்கு நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.20 லட்சத்து 21 ஆயிரத்தை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story