மாவட்ட செய்திகள்

ஷேர் மார்க்கெட்டில் ரூ.25 லட்சம் நஷ்டம்: பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை + "||" + Rs 25 lakh loss in stock market: Graduate student commits suicide by fire

ஷேர் மார்க்கெட்டில் ரூ.25 லட்சம் நஷ்டம்: பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை

ஷேர் மார்க்கெட்டில் ரூ.25 லட்சம் நஷ்டம்: பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை
ஷேர் மார்க்கெட்டில் ரூ.25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தி அடைந்த பட்டதாரி வாலிபர். உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தார்.
திரு.வி.க. நகர்,

சென்னை முகப்பேர் மேற்கு 2-வது பிரதான சாலையை சேர்ந்தவர் கவின் கார்த்திக் (வயது 34). பட்டதாரியான இவர், ஆன்லைன் மூலம் ஷேர் மார்க்கெட்டில் பண பரிவர்த்தனை செய்து வந்தார். அதற்கான பணத்தை தனது தந்தையின் பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து செலுத்தினார். ஆனால் அதில் ரூ.25 லட்சம் வரை அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


தீக்குளித்து தற்கொலை

இதனால் விரக்தி அடைந்த கவின் கார்த்திக், தனது வீட்டின் மொட்டை மாடியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த கவின் கார்த்திக், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவின் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரம்: தனியார் கல்லூரியின் கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை...!
விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. கர்நாடகத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை
துமகூரு அருகே காதலன் விபத்தில் இறந்த துக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. 15-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
கூடுவாஞ்சேரி அருகே 15-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை ெசய்து கொண்டார்.
4. 15-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
15-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை ெசய்து கொண்டார்.
5. பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்த வேதனையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்து விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.