மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவை மீறிசிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தியதால் பரபரப்புபோலீசார் விசாரணை + "||" + Chicken eating competition

முழு ஊரடங்கு உத்தரவை மீறிசிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தியதால் பரபரப்புபோலீசார் விசாரணை

முழு ஊரடங்கு உத்தரவை மீறிசிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தியதால் பரபரப்புபோலீசார் விசாரணை
நல்லம்பள்ளி அருகே முழு ஊரடங்கு உத்தரவை மீறி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளமுக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள், ஊர்மக்கள் ஒன்றுகூடி சிக்கன் சாப்பிடும் போட்டியை நடத்தினர். இந்த போட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிர்ணயித்த நேரத்தில் சிக்கன் சாப்பிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று போட்டியை நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். ஊரடங்கு உத்தரவை மீறியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் போட்டி நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.