பள்ளிக்கூட மாணவர்கள் அடையாள அட்டையை காண்பித்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்


பள்ளிக்கூட மாணவர்கள் அடையாள அட்டையை காண்பித்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 17 Jan 2022 3:02 PM GMT (Updated: 17 Jan 2022 3:02 PM GMT)

பள்ளிக்கூட மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூட மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சிறப்பு முகாம் மூலமும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த வாரம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி முகாம் வருகிற நாட்களில் தொடர்ந்து நடைபெறும். 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கடந்த 3-ந்தேதி முதல் சில நாட்கள் தடுப்பூசி முகாம் அமைத்தும், பள்ளிக்கூடத்திலும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 523 பள்ளிக்கூடங்களில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 சிறுவர்கள் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என பட்டியல் பெறப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக வருகிற 31-ந்தேதி வரை 1 முதல் பிளஸ்-2 வரை மாணவர்களுக்கு பள்ளிக்கூட விடுமுறை விடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
அடையாள அட்டை
எனவே 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கும் மையங்களில், தங்களது பள்ளிக்கூட அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இதுவரை 77 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
மற்ற மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கும் கடந்த 10-ந்தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story