புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று


புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 Jan 2022 6:15 PM GMT (Updated: 2022-01-17T23:45:53+05:30)

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை:
கொரோனா பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.‌ தினசரி பாதிப்பு 70-ஐ தாண்டி சென்றுவிட்டது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 18 பேர் குணமடைந்தனர். இதனால் 'டிஸ்சார்ஜ்' ஆனவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 66 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனவுக்கு 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது.

Next Story