மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய 2 பேர் கைது + "||" + 2 arrested for smuggling cannabis

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது
திருக்குறுங்குடி அருகே கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகோபாலலிங்கம் மற்றும் போலீசார் ராஜபுதூர்-கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது 2 பேரும் போலீசாரை அவதூறாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தனர். எனினும் 2 பேரையும் போலீசார் பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது, அதில் 370 கிராம் கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், அவர்கள் மகிழடி நடுத்தெருவை சேர்ந்த அன்னராஜா (வயது 45), மேலமாவடியை சேர்ந்த ஜெயக்குமார் (46) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. டிராக்டர் திருடிய 2 பேர் கைது
டிராக்டர் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
உத்தனப்பள்ளி அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. பெண்ணை அவதூறாக பேசிய 2 பேர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் பெண்ணை அவதூறாக பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
சுரண்டையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
5. குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது