சதுரகிரி கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை


சதுரகிரி கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 17 Jan 2022 8:41 PM GMT (Updated: 17 Jan 2022 8:41 PM GMT)

பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

வத்திராயிருப்பு, 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் கூறினர். இதையடுத்து தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். நேற்று தை மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பவுர்ணமி பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Next Story