10-ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய வாலிபர் கைது


10-ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2022 9:09 PM GMT (Updated: 2022-01-18T02:39:42+05:30)

சிந்தாமணி தாலுகாவில் 10-ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்: சிந்தாமணி தாலுகாவில் 10-ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

10-ம் வகுப்பு மாணவி

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா சிக்கலநேர்ப்பு ஹோப்ளிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் நவீன்(வயது 24). அதே கிராமத்தில் 15 வயது மைனர் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த மைனர் பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். தினமும் அந்த மாணவி தங்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வது வழக்கம்.

அதேபோல் சம்பவத்தன்றும் அந்த மாணவி, தங்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ஒரு பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். அப்போது அங்கு சென்ற நவீன், அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் நடந்த சம்பவங்களை வெளியே சொல்லக்கூடாது என்று கூறி அந்த மாணவிக்கு நவீன் கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவர் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

கைது

இதற்கிடையே, மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் அவரை டாக்டரிடம் அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதித்த டாக்டர் அவள் கர்ப்பமாக இருப்பதாக கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது நவீன் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்தது பற்றி மாணவி கண்ணீர் மல்க தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறாள். 

இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைதொடர்ந்து, மாணவியின் தாய் இதுபற்றி கெஞ்சார்லஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Next Story