புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Jan 2022 9:14 PM GMT (Updated: 17 Jan 2022 9:14 PM GMT)

புகாா்பெட்டியில் தஞ்சை மக்கள் தாிவித்த குறைகள் விவரம் வருமாறு

சாலை சீரமைக்கப்படுமா
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி குமரன்குடி கீழத்தெருவில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமின்றி சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அந்த சாலை வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி குமரன்குடி கீழத்தெருவில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
கணேஷ் கும்பகோணம்.

கூடுதல் மருத்துவ பணியாளர்கள் வேண்டும்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று சென்று வருகின்றனர். குறிப்பாக ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் புறநோயாளிகள் பிரிவில் குறைந்த அளவில் மருத்துவ பணியாளர்கள் இருப்பதால் அங்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
முத்துக்குமார் கும்பகோணம்.

Next Story