கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரி துணை மேலாளர் திடீர் சாவு


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரி துணை மேலாளர் திடீர் சாவு
x
தினத்தந்தி 18 Jan 2022 12:16 AM GMT (Updated: 2022-01-18T05:46:10+05:30)

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரி துணை மேலாளர் திடீர் சாவு.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்தீப்மோகன் (வயது 29). இவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 7 ஆண்டுகளாக துணை மேலாளராக பணிபுரிந்து வந்தார். சந்தீப்மோகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தான் பணிபுரிந்து வரும் தனியார் ஆஸ்பத்திரியில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். நேற்று காலை ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், பரிசோதனை செய்வதற்காக சென்றபோது சந்தீப்மோகன் கட்டிலில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கீழ்ப்பாக்கம் போலீசார், சந்தீப்மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தீப்மோகன் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த சந்தீப்மோகன் கையில் ஊசி ஒன்று பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததும், அவரது கையில் ஊசி போட்டதற்கான தடங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.

Next Story