மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 777 பேருக்கு கொரோனா + "||" + corona

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 777 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 777 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 777 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர் ஒருவர் தொற்றுக்கு பலியாகி உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 777 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர் ஒருவர் தொற்றுக்கு பலியாகி உள்ளார்.
777 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 202 பேருக்கு பரிசோதனை செய்ததில் 613 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது.
இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 777 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 283 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 237 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 201 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
முதியவர் பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 75 வயது முதியவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 15-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்தது.
தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 3 ஆயிரத்து 366 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை, கோவை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
2. கொரோனாவில் இருந்து குணமடைந்தவரா நீங்கள்?ஆய்வில் கூறும் உண்மை என்ன ?
கொரோனா பாதித்த பாதி பேர், பாதிப்புக்கு உள்ளான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் எதாவது ஒரு நோய் அறிகுறியுடன் காணப்படுவது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
3. ‘கொரோனாவுக்கு எதிரான யுக்தியை மாற்றுங்கள்’ - சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டிப்பு
கொரோனாவுக்கு எதிரான யுக்தியை மாற்றுங்கள் என்று சீனாவை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.
4. தொடர்ந்து குறைந்து வரும் தொற்று: தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. அந்தவகையில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. மெகா சிறப்பு முகாம்: தமிழகத்தில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் நேற்று மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.