தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் உள்பட 2 பேர் பலி


தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 18 Jan 2022 5:05 PM GMT (Updated: 2022-01-18T22:35:40+05:30)

தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர்.

தேன்கனிக்கோட்டை:
தனியார் பஸ் மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 20). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (43). விவசாயி. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை அஞ்செட்டியில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்தேவனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ள வளைவில் தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி நோக்கி சென்ற தனியார் பஸ், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பிரசாத், மாரிமுத்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 
2 பேர் பலி
அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பிரசாத், மாரிமுத்து ஆகியோர் அடுத்தடுத்து பலியாகினர். 
இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story