மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 18 Jan 2022 5:15 PM GMT (Updated: 2022-01-18T22:45:40+05:30)

மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
89 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தப்படியே உள்ளது. தினசரி பாதிப்பில் இரட்டை இலக்க எண்ணில் இருந்து மூன்று இலக்க எண்ணாக மாறும் வகையில் காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 26 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 92 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது.
அபராதம் விதிப்பு
கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.‌ முக கவசம் அணியாமல் சாலையில் சுற்றித்திரியும் நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

Next Story