கோபியில் குண்டர் சட்டத்தில் பிரபல கொள்ளையன் கைது


கோபியில்  குண்டர் சட்டத்தில் பிரபல கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 18 Jan 2022 5:31 PM GMT (Updated: 18 Jan 2022 5:31 PM GMT)

கோபியில் குண்டர் சட்டத்தில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

கோபியில் குண்டர் சட்டத்தில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். 
41 வழக்குகள்
கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு வந்த பெண் ஒருவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து அந்த பெண், கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் இருந்த பணத்தை திருடியதாக கரூர் மாவட்டம் பெருச்சிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்கிற ராஜா (வயது 48) என்பவரை கைது செய்தனர். 
மேலும் கைது செய்யப்பட்ட ஆறுமுகத்தின் மீது கரூர், பசுவபட்டி, வெங்கமேடு, அவினாசி, கோவை, பெருந்துறை, சத்தியமங்கலம், மற்றும் கோபி ஆகிய போலீஸ் நிலையங்களில் 41 திருட்டு மற்றும் கொள்ளை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு  உள்ளது என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 
குண்டர் சட்டத்தில் கைது 
இதைத்தெடர்ந்து கைது செய்யப்பட்ட ஆறுமுகம் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
இந்த நிலையில் ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதையடுத்து ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு, கோவை மத்திய சிறை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.  

Next Story