நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 295 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,698 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 295 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,698 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2022 5:57 PM GMT (Updated: 2022-01-18T23:27:50+05:30)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 56,698 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல், ஜன.19-
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 56,698 ஆக அதிகரித்து உள்ளது.
295 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 56 ஆயிரத்து 403 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 698 ஆக அதிகரித்து உள்ளது.
1,623 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று இம்மாவட்டத்தில் 92 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 54 ஆயிரத்து 553 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 522 பேர் உயிரிழந்த நிலையில் 1,623 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story