காட்பாடி பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


காட்பாடி பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 18 Jan 2022 6:42 PM GMT (Updated: 18 Jan 2022 6:42 PM GMT)

காட்பாடி பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காட்பாடி

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலமான காட்பாடி பகுதியில் சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 

மேலும் பூக்கடையின் உரிமையாளர் ஒருவர் முகக் கவசம் அணியாமல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவரை முகக் கவசம் அணியச் செய்தனர். 2 சிக்கன் கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும் ரூ.12,600 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

Next Story