காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது


காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2022 7:37 PM GMT (Updated: 2022-01-19T01:07:22+05:30)

நெல்லையில் காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 120 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த அருள் இமானுவேல் ஸ்டீபன் மற்றும் அசோக் ராஜதுரை என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story