மாவட்ட செய்திகள்

பால் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி + "||" + milk Lorry- motorcycle collision; Valipar kills

பால் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

பால் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
பால் லாரி- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் வாலிபர் இறந்தார்.
மங்களமேடு:
குன்னம் வட்டம் மேட்டுகாளிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமியின் மகன் சாந்தப்பன்(வயது 21). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் திட்டக்குடியில் இருந்து சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வசிஷ்டபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு உள்ள வளைவில் திரும்பியபோது எதிரே வந்த பால் லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலனூர் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து...!
மேலனூர் அருகே சாலையோர மண் சரிந்ததில் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
2. மளிகை பொருட்கள் ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்தது
திண்டிவனம் அருகே மளிகை பொருட்கள் ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.
3. மோட்டார் சைக்கிள் விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பலி
திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.
4. பொக்லைன் எந்திரம் மோதி சிறுமி பலி
கமுதியில் பொக்லைன் எந்திரம் மோதி சிறுமி பலியானாள்.
5. வேளாண் கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...!
புதுக்கோட்டை அருகே வேளாண் கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.