திருவாரூரில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2022 3:42 PM GMT (Updated: 2022-01-19T21:12:42+05:30)

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிடக்கோரி திருவாரூரில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி:
எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிடக்கோரி திருவாரூரில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
ஆர்ப்பாட்டம் 
எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிடக்கோரி  திருவாரூர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காப்பீடு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட இணை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த மதுசூதனன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த ஜெயராஜ், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த சித்தார்த்தன், கமலவடிவேல், முகவர் சங்கத்தை சேர்ந்த விஜயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். 
சிறப்பு சேவை மையம் 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக திருவாரூர் அலுவலகத்தில் பாலிசிதாரர் சிறப்பு சேவை மையத்தை முதுநிலை மேலாளர் ரெங்கராஜன் தொடங்கி வைத்தார்.

Next Story