காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2022 4:25 PM GMT (Updated: 2022-01-19T21:55:27+05:30)

முத்துப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
முத்துப்பேட்டை மீன்வள உதவி ஆய்வாளர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் மீனவர் பிரிவு சார்பில் மீன்வளத்துறையில் நடந்த முறைகேடு மற்றும் நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் நிஜாம்தீன் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஹாஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், என்.ஜி.ஓ. வட்டார தலைவர் திருநாவுக்கரசு, நகர துணைத்தலைவர் முகமது ஹசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மெட்ரோ மாலிக், முன்னாள் நகர தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் என்.ஜி.ஓ. செக்டர் மாவட்ட தலைவர் அன்பழகன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாட்சா, மாவட்ட பேச்சாளர் சேக் ஆகியோர் பேசினர். 
கோஷம் 
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரராமன், வட்டார தலைவர்கள் வடுகநாதன், கோவி.ரெங்கசாமி, நகர மீனவர் பிரிவு தலைவர் ஹபீப் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு துறைக்காடு மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்து கோஷமிட்டனர். 

Next Story