மன்னார்குடியில் ரூ.2 கோடியே 4 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்

மன்னார்குடியில் ரூ.2 கோடியே 4 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்
x
தினத்தந்தி 19 Jan 2022 4:31 PM GMT (Updated: 19 Jan 2022 4:31 PM GMT)

மன்னார்குடியில் ரூ.2 கோடியே 4 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சியில் அமைச்சர்- எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

மன்னார்குடி:

காணொலி காட்சி மூலம் திறப்பு 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் ரூ.1 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் 4090 சதுர அடி பரப்பளவில் உதவி கலெக்டர் அலுவலகம் கட்டிடம், ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 966 சதுர அடி பரப்பளவில் தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் என மொத்தம் ரூ.2 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர்  சக்கரபாணி கலந்து கொண்டார். 
மரக்கன்று நட்டார் 
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், செல்வராசு, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து,  மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி, தாசில்தார் ஜீவானந்தம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் சக்கரபாணி, உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

Next Story