வெளிநாட்டில் ேவலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்த ஆயிங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது


வெளிநாட்டில் ேவலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்த  ஆயிங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது
x
தினத்தந்தி 19 Jan 2022 4:49 PM GMT (Updated: 19 Jan 2022 4:49 PM GMT)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்த ஆயிங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை:
ஊராட்சி மன்ற தலைவர்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜமாணிக்கம் (வயது 38). இவர் மீது ஏற்கனவே 4 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ராஜமாணிக்கம் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சத்திற்கு மேல் பெற்றுள்ளார்.  ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த நபர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப வில்லை. பணத்தை கொடுத்தவர்கள், நாங்கள் கொடுத்த பணத்தை திரும்பி கொடுங்கள் என்று ராஜமாணிக்கத்திடம் பலமுறை கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
கைது 
இதனால் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கத்தை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story