குடும்ப தகராறில் பெண் தற்கொலை


குடும்ப தகராறில் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 19 Jan 2022 5:23 PM GMT (Updated: 2022-01-19T22:53:06+05:30)

குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர், 
திருப்பத்தூர் அருகே கம்பனூரைச்சேர்ந்த வயிரவன் மனைவி ஆதிசெல்வி (வயது34). வயிரவன் வெளிநாட்டில் உள்ளார்.  ஆதிசெல்வி மாமியார் வீட்டின் அருகே  2 மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஆதிசெல்விக்கும், அவரது மாமியாருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ஆதிசெல்வி வீட்டில் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த  நாச்சியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story