மயானத்திற்கு செல்ல பாதை இல்லை: இறந்தவர் உடலை கழுத்தளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்


மயானத்திற்கு செல்ல பாதை இல்லை: இறந்தவர் உடலை கழுத்தளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்
x
தினத்தந்தி 19 Jan 2022 6:35 PM GMT (Updated: 19 Jan 2022 6:35 PM GMT)

கறம்பக்குடி அருகே மயான பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலநிலை உள்ளது.

கறம்பக்குடி:
பாதை வசதி இல்லை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா பட்டத்திக்காடு ஊராட்சி மயிலாடி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மயானத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. இதனால் 40 வருடத்திற்கு மேலாக மயானத்திற்கு செல்ல விவசாய நிலங்கள் மற்றும் குளத்தில் இறங்கி தான் இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று வருகின்றனர்.
கழுத்தளவு தண்ணீரில்...
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்நிலையில் மயிலாடி தெருவை சேர்ந்த குழந்தையன் மனைவி சிந்தாமணி என்பவர் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை குளத்தின் வழியாக கழுத்தளவு தண்ணீரில் தூக்கி சென்று உறவினர்கள் தகனம் செய்தனர். எனவே மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story